அம்பத்தூரில் மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் உண்ணாவிரதம்
சென்னையை அடுத்த அம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே செயல்பட்டு வரும் மதுக்கடையை மூடக்கோரி,
ஆவடி,
அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமான பொதுமக்கள் நேற்று காலை முதல் மாலை வரை மதுக்கடை அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கடையால் பள்ளி மாணவிகள், பெண்கள் உள்பட பொதுமக்கள் பாதிக்கப்படுவதால் உடனடியாக அந்த மதுக்கடையை மூட வேண்டும் என வலியுறுத்தினர். போராட்டத்தில் மதுக்கடைக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
பின்னர் இது தொடர்பான கோரிக்கை மனு மற்றும் பொதுமக்களிடம் கையெழுத்து பெற்ற நகலை திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்படும் என தெரிவித்தனர்.
Related Tags :
Next Story