சாலையோரம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி பறிமுதல் 2 பேர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே சாலையோரம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டியை அடுத்த புதுவாயல் கிராமத்தில் இருந்து ரேஷன் அரிசி மூட்டைகள் ஆந்திராவுக்கு கடத்துவதற்காக சென்னை–கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையோரம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜனுக்கு ரகசிய தகவல் வந்தது.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சப்–இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தலைமையில் அங்கு சென்ற கவரைப்பேட்டை போலீசார் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த தலா 50 கிலோ எடை கொண்ட 28 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த கவரைப்பேட்டை போலீசார் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட ஆந்திர மாநிலம் கர்னூல் பகுதியை சேர்ந்த மல்லிகாஅர்சுணா (வயது 25) மற்றும் நாகேந்திரகுமார் (25) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story