தேசிய தொழில்நுட்ப கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை


தேசிய தொழில்நுட்ப கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 30 Jun 2017 5:13 AM IST (Updated: 30 Jun 2017 5:51 AM IST)
t-max-icont-min-icon

சென்னை அடையாறில் தேசிய தொழில்நுட்ப கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை,

சென்னை அடையாறில் தேசிய தொழில்நுட்ப கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு ராக்கிங் காரணமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை அடையாறு பகுதியை சேர்ந்தவர் நாராயணன். இவருடைய மகன் சித்தார்த்த கிருஷ்ணன்(வயது 21). இவர் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள தேசிய தொழில்நுட்ப கல்லூரியில் என்ஜினீயரிங் 3–ம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தேசிய தொழில்நுட்ப கல்லூரியில் படித்த மாணவர்களை கல்லூரி நிர்வாகம் பயிற்சிக்காக பெங்களூரு அழைத்து சென்றது. அந்த பயிற்சிக்காக சித்தார்த்த கிருஷ்ணனும் சென்றார். அங்கு பயிற்சி முடித்துவிட்டு கடந்த 24–ந்தேதி சித்தார்த்த கிருஷ்ணன் சென்னை வந்தார். அதில் இருந்தே அவர் மிகுந்த சோகத்துடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சித்தார்த்த கிருஷ்ணன் தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை நாராயணன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அடையாறு போலீசார் விரைந்து சென்று சித்தார்த்த கிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து அடையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து சித்தார்த்த கிருஷ்ணன் பயிற்சிக்காக பெங்களூரு சென்றபோது அவரை யாரும் ராக்கிங் செய்தனரா?, இல்லையெனில் அவர் காதல் விவகாரத்தில் தற்கொலை செய்தாரா? என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story