விபத்து ஏற்படுத்துவதுபோல வேகமாக வந்த பஸ் சிறைபிடிப்பு டிரைவர் மீது தாக்குதல்


விபத்து ஏற்படுத்துவதுபோல வேகமாக வந்த பஸ் சிறைபிடிப்பு டிரைவர் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 2 July 2017 4:15 AM IST (Updated: 2 July 2017 2:29 AM IST)
t-max-icont-min-icon

தலைவாசல் அடுத்த வேப்பநத்தம் கிராமத்திற்குள் நேற்று தனியார் பஸ் ஒன்று விபத்து ஏற்படுத்துவதுபோல அதிவேகமாக வந்துள்ளது. அப்போது பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த பொதுமக்கள் பஸ்சை நிறுத்தி சிறைபிடித்தனர்.

தலைவாசல்,

தலைவாசல் அடுத்த வேப்பநத்தம் கிராமத்திற்குள் நேற்று தனியார் பஸ் ஒன்று விபத்து ஏற்படுத்துவதுபோல அதிவேகமாக வந்துள்ளது. அப்போது பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த பொதுமக்கள் பஸ்சை நிறுத்தி சிறைபிடித்தனர். பின்னர் டிரைவர் மீது தாக்குதல் நடத்தி, தலைவாசல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்–இன்ஸ்பெக்டர் கோபால், இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.


Next Story