தேனிக்கு சுற்றுலா சென்ற இடத்தில் வாலிபர் மர்ம சாவு நண்பரிடம் போலீஸ் விசாரணை
சென்னையை அடுத்த நந்தம்பாக்கம் துளசிங்கபுரத்தை சேர்ந்தவர் மாதவன் (வயது 38). இவர், தனது நண்பர் தினேஷ் (30) என்பவருடன் கடந்த 30–ந் தேதி தேனி மாவட்டத்துக்கு சுற்றுலா சென்றார்.
ஆலந்தூர்,
இந்த நிலையில் நேற்று தினேஷ், தேனிக்கு சுற்றுலா சென்ற இடத்தில் மாதவன் இறந்துவிட்டதாக கூறி அவரது உடலை நந்தம்பாக்கத்துக்கு கொண்டு வந்தார். தனது கணவரின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி மாதவனின் மனைவி பியூலா, நந்தம்பாக்கம் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் மாதவனின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாதவனின் நண்பர் தினேஷிடம் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story