வகுப்பறையில் பிளஸ்–2 மாணவி வி‌ஷம் குடித்தார்


வகுப்பறையில் பிளஸ்–2 மாணவி வி‌ஷம் குடித்தார்
x
தினத்தந்தி 13 July 2017 5:33 AM IST (Updated: 13 July 2017 5:33 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்–2 படித்து வரும் மாணவி ஒருவர் நேற்று வகுப்பறையில் திடீரென வீட்டில் இருந்து கொண்டு வந்திருந்த வி‌ஷத்தை குடித்து மயங்கினார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்–2 படித்து வரும் மாணவி ஒருவர் நேற்று வகுப்பறையில் திடீரென வீட்டில் இருந்து கொண்டு வந்திருந்த வி‌ஷத்தை குடித்து மயங்கினார். உடனே பள்ளி நிர்வாகத்தினர் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் மருத்துவமனைக்கு சென்று மாணவியிடம் விசாரணை நடத்தினர். அப்போது மாணவி போலீசாரிடம், என்னை எனது பெற்றோர் பள்ளி விடுதியில் தங்கி படிக்க சொல்லி கட்டாயப்படுத்துகின்றனர். அதனால் நான் தற்கொலைக்கு முயன்றேன் என்று கூறினார். பின்னர் சிறிது நேரம் கழித்து எனக்கு பள்ளி ஆசிரியர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுப்பதாகவும் கூறினார்.

இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், மாணவி மாறி, மாறி தற்கொலைக்கான காரணம் பற்றி கூறுகிறார். இதுகுறித்து விசாரித்து வருகிறோம் என்றனர்.


Next Story