விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
விபத்தில் காயமடைந்தவருக்கு நஷ்டஈடுவழங்காததால் அரசுபஸ் ஜப்தி செய்யப்பட்டது.
வாணியம்பாடி
விபத்தில் காயமடைந்தவருக்கு நஷ்டஈடுவழங்காததால் அரசுபஸ் ஜப்தி செய்யப்பட்டது. இதனால் வாணியம்பாடி பஸ்நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
வாணியம்பாடியை அடுத்த அலசந்தாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 48). இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு சென்னையில் இருந்து வாணியம்பாடிக்கு அரசு பஸ்சில் பயணம் செய்தார். அப்போது ஆம்பூர் அருகே செங்கிலிகுப்பம் என்ற இடத்தில் நடந்த பஸ் விபத்தில் முருகேசன் படுகாயம் அடைந்தார். இதுதொடர்பாக முருகேசன் வாணியம்பாடி சார்பு நீதிமன்றத்தில் ரூ.25 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த 6.6.2016 ஆம் தேதி முருகேசனுக்கு ரூ.12 லட்சத்து 54 ஆயிரத்து 460 நஷ்டஈடு வழங்க சேலம் கோட்ட அரசு பேருந்து கழகத்திற்கு உத்தரவிட்டார். ஆனால் இதுவரை நஷ்டஈடு வழங்கவில்லை. அதைத்தொடர்ந்து இதுகுறித்து முருகேசன் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி ராமச்சந்திரன், விபத்தில் பாதிக்கப்பட்ட முருகேசனுக்கு நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.
அதன்பேரில் நீதிமன்ற பணியாளர்கள் மற்றும் வக்கீல்கள் முனையில் நேற்று மாலை சேலத்தில் இவுந்து வேலூர் நோக்கி வந்த அரசு பஸ்சை வாணியம்பாடி பஸ்நிலையத்தில் நிறுத்தி ஜப்தி செய்தனர். ஜப்தி செய்யப்பட்ட பஸ் ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு எடுத்து செல்லப்பட்டு பஸ்சின் சாவி நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதனால் வாணியம்பாடி பஸ்நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.Related Tags :
Next Story