வெளிமாநில மது விற்ற 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது


வெளிமாநில மது விற்ற 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 15 July 2017 11:55 PM GMT (Updated: 2017-07-16T05:25:19+05:30)

காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த சூனாம்பேடு காலனி பகுதியில் வெளிமாநில மதுபானங்கள் விற்பனை நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

மதுராந்தகம்,

காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த சூனாம்பேடு காலனி பகுதியில் வெளிமாநில மதுபானங்கள் விற்பனை நடப்பதாக மதுராந்தகம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவின் பேரின் சூனாம்பேடு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அமல்ராஜ் சப்–இன்ஸ்பெக்டர் ராமு மற்றும் போலீசார் சூனாம்பேடு காலனி பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வெளிமாநில மதுபானங்களை விற்பனை செய்து கொண்டிருந்த இனியவன்(29), சுந்தரி (50) தாமரை குளத்தை சேர்ந்த செண்பகம் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வெளிமாநில டின்பீர் உள்ளிட்ட மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story