ஆரல்வாய்மொழி ரியல் எஸ்டேட் அதிபரிடம் வழிப்பறி: 6 பேர் கைது
ஆரல்வாய்மொழி ரியல் எஸ்டேட் அதிபரிடம் வழிப்பறி: தந்தை- மகன் உள்பட மேலும் 6 பேர் கைது; 3 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் மீட்பு 2 கார்-மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
நெல்லை
நெல்லையில் ஆரல்வாய்மொழியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரிடம் வழிப்பறி செய்த சம்பவத்தில் தந்தை-மகன் உள்பட மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகள் மீட்கப்பட்டன. மேலும் 2 கார்-மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 36). இவர் காற்றாலை நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். கூடுதலாக ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். இவர் தன்னிடம் இருந்த 3 கோடிக்கான பழைய செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு முயற்சி செய்தார்.
இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு பால்ராஜ் தன்னுடைய கூட்டாளிகளுடன் மேலப்பாளையம் வந்து, அழகிரிபுரத்தை சேர்ந்த புரோக்கர் ஜெயபாலை சந்தித்தார். பின்னர் அவர்கள் ஒரு காரில் தச்சநல்லூர் கரையிருப்பு பகுதிக்கு சென்றனர். அங்கு தயார் நிலையில் நின்றிருந்த ஒரு கும்பல் பால்ராஜ் உள்ளிட்டோரை தாக்கி விட்டு ரூ.3 கோடி பழைய நோட்டுகளை பறித்துச் சென்றது.
இதனால் ஆத்திரம் அடைந்த பால்ராஜ் தரப்பினர் தங்களுடன் வந்து, நடுவழியில் இறங்கிச் சென்ற ஜெயபால், இந்த வழிப்பறி சம்பவத்துக்கு காரணம் என்று கருதினர். உடனடியாக மேலப்பாளையம் சென்று ஜெயபால் மகன் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வரும் சுரேசை கடத்தி சென்றனர்.
மகன் கடத்தப்பட்டது குறித்து ஜெயபால் மேலப்பாளையம் போலீசில் புகார் கொடுத்தார். அப்போதுதான் 3 கோடிக்கான பழைய ரூபாய் நோட்டுகள் வழிப்பறி செய்யப்பட்ட விவரம் போலீசாருக்கு தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேசை மீட்டனர். மேலும் மாணவர் சுரேசை கடத்தியது தொடர்பாக பால்ராஜ் உள்பட 6 பேரை கைது செய்தனர்.
இதையடுத்து ரூ.3 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் வழிப்பறி தொடர்பாக நெல்லை டவுன் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் அமர்நாத் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் நெல்லை மாவட்டம் வடக்கு விஜயநாராயணத்தை சேர்ந்த கொம்பையா (வயது 35), சங்கர்நகர் முருகன் (68), முருகனின் மகன் வீரபுத்திரன் (25), கீழநத்தம் சங்கரபாண்டியன் (25), குறுக்குத்துறை விளாகம் மாரிமுத்து (21), மேலநத்தம் ரங்கசாமி (29) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இவர்கள் 6 பேரும் வழிப்பறி கும்பலைச் சேர்ந்தவர்கள் ஆவார்.
இதுகுறித்து நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் (சட்டம்- ஒழுங்கு) சுகுணா சிங், (குற்றம்- போக்குவரத்து) பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
நெல்லையில் ரூ.3 கோடிக்கான, மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான முயற்சி நடந்துள்ளது. அப்போது பழைய ரூபாய் நோட்டுகளை வாங்கிக் கொண்டு, புதிய ரூபாய் நோட்டுகள் தருவதாக ஒரு கும்பல் நாடகம் ஆடி உள்ளது. அவர்கள் பழைய நோட்டுகளை பறித்துக் கொண்டு தலைமறைவாகி விட்டனர்.
இது தொடர்பாக தற்போது வரை 12 பேரை கைது செய்து உள்ளோம். புரோக்கரின் மகன் கடத்தல் சம்பவத்தில் ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த சம்பவத்தின் போது வழிப்பறி செய்யப்பட்ட ரூ.3 கோடி பழைய நோட்டுகள் மீட்கப்பட்டு உள்ளன. இதில் 2 கோடியே 60 லட்சத்துக்கு 1,000 ரூபாய் நோட்டுகளும், 40 லட்சத்துக்கு 500 ரூபாய் நோட்டுகளும் உள்ளன. மேலும் பணம் கொண்டு வரப்பட்டு சேதம் அடைந்த ஒரு கார் மற்றும் பணத்தை பறித்துச் சென்றவர்கள் பயன்படுத்திய கார் என மொத்தம் 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இதுதவிர 6 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 11 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. வழிப்பறி சம்பவத்தில் நாங்குநேரியைச் சேர்ந்த சுந்தர் உள்பட 5 பேரை தேடி வருகிறோம்.
தற்போது கைப்பற்றப்பட்டுள்ள பழைய ரூபாய் நோட்டுகள் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்படும். அவர்கள் பழைய ரூபாய் நோட்டுகள் இருப்பு வைத்திருந்தது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுப்பார்கள்.
மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பணத்தை இனிமேல் மாற்ற முடியாது. எனவே அவ்வாறு மாற்றுவதற்கு யாரும் முயற்சிகள் செய்து, இதுபோன்ற சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Tags :
Next Story