விமான நிலையத்தில் ரூ.57 லட்சம் தங்கம் கடத்தி வந்த 4 பேர் சிக்கினர்
மும்பை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.57 லட்சம் மதிப்பிலான தங்கம் கடத்தி வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,

துபாய் விமானம்
மும்பை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு துபாயில் இருந்து வந்த விமானம் ஒன்று தரையிறங்கியது. அதில், வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். இதில் ஹூசேன் சேக் என்ற பயணி கொண்டு வந்த மோட்டார் பம்பில் தங்கக்கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.34 லட்சம் என்பது தெரியவந்தது.
இதுபோல அதே விமானத்தில் வந்த அப்துல்லா அல்டாப் என்ற பயணி கடத்தி வந்த ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
4 பேர் கைது
மற்றொரு விமானத்தில் வந்த முகமது சேக் என்ற பயணியிடம் அதிகாரிகள் நடத்திய சோதனையில், அவர் தனது ஆசனவாயில் மறைத்து வைத்து ரூ.6 லட்சத்து 90 ஆயிரம் தங்க கட்டிகளை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த தங்கக்கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுபோல சவுதி அரேபியாவில் இருந்து விமானத்தில் வந்திறங்கிய பாதும் முகமது என்ற பயணியின் கைப்பையை அதிகாரிகள் சோதனை நடத்தியதில், அவர் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.8 லட்சத்து 85 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
மேற்படி சம்பவங்களில் பிடிபட்ட 4 பேரும் சகார் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மொத்த மதிப்பு ரூ.57 லட்சத்து 25 ஆயிரம் ஆகும்.

Related Tags :
Next Story