அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்க ராகுல் காந்தி இன்று பெங்களூரு வருகை கர்நாடக காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் பேட்டி
அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்க ராகுல் காந்தி இன்று(வெள்ளிக்கிழமை) பெங்களூரு வருகிறார்.
பெங்களூரு,
அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்க ராகுல் காந்தி இன்று(வெள்ளிக்கிழமை) பெங்களூரு வருகிறார் என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் கூறினார்.
இதுதொடர்பாக நேற்று அவர் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
ராகுல்காந்தி பெங்களூரு வருகிறார்அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி சர்வதேச மாநாடு பெங்களூருவில் நாளை(அதாவது இன்று) மாலை 5 மணிக்கு விவசாய பல்கலைக்கழகத்தில் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி நாளை(இன்று) பெங்களூரு வருகிறார். காங்கிரஸ் நிர்வாகிகள் நியமனத்தில் சிலர் அதிருப்தி அடைந்துள்ளதாக நீங்கள் சொல்கிறீர்கள். காங்கிரஸ் பெரிய கட்சி. அதிருப்தி இருப்பது சர்வ சாதாரணம். தொண்டர்கள் அதிகமாக இருப்பதால் பதவியை எதிர்பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.
கட்சியில் அதிருப்தியே இல்லை என்று நான் சொல்லவில்லை. அதிருப்தியில் உள்ளவர்களை அழைத்து சமாதானப்படுத்துவோம். சரியான தலைவர்களுக்கு பதவியை வழங்கும் பணியை செய்கிறோம். கர்நாடகத்திற்கு தனி கொடியை உருவாக்குவது குறித்து குழு அமைக்கப்பட்டுள்ளது. கொடி விவகாரம் முந்தைய பா.ஜனதா காலத்திலேயே வந்தது. இதை அப்போது அவர்கள் கைவிட்டனர். இப்போது நாங்கள் குழு மட்டுமே அமைத்துள்ளோம்.
வழக்கு தொடரட்டும்மலிவு விலை உணவகம் அமைப்பதில் முறைகேடு நடந்துள்ளதாக பா.ஜனதாவினர் குற்றம்சாட்டுகிறார்கள். இது தொடர்பாக ஏதாவது ஆதாரம் இருந்தால் அதை வைத்து வழக்கு தொடரட்டும். ஆகஸ்டு 4–ந் தேதி ராய்ச்சூரில் எங்கள் கட்சியின் மாநாடு நடக்கிறது. அதில் அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி கலந்து கொள்வார்.
இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.