நெடுவாசலில் போராடும் மக்களை தேச துரோகிகள் என்று பேசிய எச்.ராஜாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்


நெடுவாசலில் போராடும் மக்களை தேச துரோகிகள் என்று பேசிய எச்.ராஜாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 July 2017 4:00 AM IST (Updated: 22 July 2017 2:08 AM IST)
t-max-icont-min-icon

நெடுவாசலில் போராடும் மக்களை தேச துரோகிகள் என்று பேசிய பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியதை கண்டித்து, நெடுவாசலில் அப்பகுதி மக்கள் கடந்த ஏப்ரல் மாதம் 12–ந் தேதி 2–ம் கட்டமாக போராட்டத்தை தொடங்கினர். அதில் இருந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நூதன போராட்டங்கள் நடத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நெடுவாசல் நாடியம்மன் கோவில் அருகே 101–வது நாளாக நேற்று போராட்டம் நடைபெற்றது.

இதில், ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கொண்டு திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் பொதுமக்கள் பல்வேறு கோ‌ஷங்களை எழுப்பினார்கள். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் நெடுவாசல் மற்றும் கதிராமங்கலத்தில் போராடி வரும் மக்களை தீவிரவாதிகள், தேச துரோகிகள் என்று பேசிய பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story