திண்டிவனம் அருகே காரில் கடத்திவரப்பட்ட 1,680 மதுபாட்டில்கள் பறிமுதல், 2 பேர் கைது


திண்டிவனம் அருகே காரில் கடத்திவரப்பட்ட 1,680 மதுபாட்டில்கள் பறிமுதல், 2 பேர் கைது
x
தினத்தந்தி 1 Aug 2017 3:15 AM IST (Updated: 31 July 2017 11:39 PM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் அருகே காரில் கடத்தி வரப்பட்ட 1,680 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டிவனம்,

விழுப்புரம் மாவட்ட மதுவிலக்கு போலீசார் நடராஜன், நாகராஜ் ஆகியோர் திண்டிவனம் அடுத்துள்ள தழுதாளி அரசு பள்ளி அருகே புதுச்சேரி–மயிலம் சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக வந்த ஒரு காலை போலீசார் சந்தேகத்தின்பேரில் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் காரில் அட்டைபெட்டிகளில் 1,680 மதுபாட்டில்களும், ஒரு கேனில் 35 லிட்டர் சாராயமும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார், காரில் வந்தவர்களை விசாரித்தபோது, அவர்கள் புதுச்சேரி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மனோகரன்(வயது 56), கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ்(39) என்பதும், இவர்கள் புதுச்சேரியில் இருந்து காரில் மதுபாட்டில்கள், சாராயத்தை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவர்கள் 2 பேரையும் கைது செய்து, மதுபாட்டில்கள், சாராயம் மற்றும் அதனை கடத்த பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்து திண்டிவனம் மதுவிலக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.


Next Story