ரெயில்வே தரை பாலத்தில் தேங்கி நிற்கும் மழைநீர்
குடியாத்தத்தை அடுத்த மேல்ஆலத்தூர் ரெயில் நிலையம் அருகே 2 ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரெயில்வே தரை பாலம் அமைக்கப்பட்டது.
குடியாத்தம்,
இந்த வழியாக மேல்ஆலத்தூர், கூடநகரம், பட்டு, கொத்தகுப்பம், அணங்காநல்லூர் உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் குடியாத்தம் நகரத்திற்கு வந்து செல்ல வேண்டும். மழை காலங்களில் இந்த தரை பாலத்தில் மழைநீர் பெருமளவு தேங்கிவிடும். இதனை டீசல் எஞ்சின் மூலம் பம்ப் செய்து அகற்றப்படும்.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக பெய்துவரும் மழையால் தரை பாலத்தில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனை சரியான முறையில் பம்ப் செய்யாததால் அங்கு தேங்கி நிற்கும் மழைநீரால் அப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்களும், பள்ளி மாணவ, மாணவிகளும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story