பெங்களூரு அருகே தாய்–மகள் தூக்குப்போட்டு தற்கொலை காரணம் என்ன?


பெங்களூரு அருகே தாய்–மகள் தூக்குப்போட்டு தற்கொலை காரணம் என்ன?
x
தினத்தந்தி 5 Aug 2017 1:51 AM IST (Updated: 5 Aug 2017 1:50 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு அருகே தாய், மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூரு,

பெங்களூரு அருகே தாய், மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. அவர்கள் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்தார்கள்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தாய்–மகள் தற்கொலை

பெங்களூரு புறநகர் அத்திபெலே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட குமார் லே–அவுட்டில் வசித்து வருபவர் ராஜசேகர். இவரது மனைவி சிந்து (வயது 36). இவர்களுக்கு தீப்தி (17) என்ற மகள் இருந்தார். அவர், தனியார் கல்லூரியில் பி.யூ.சி. 2–வது ஆண்டு படித்து வந்தார். தென் ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள ஒரு ஆயத்த ஆடை நிறுவனத்தில் அதிகாரியாக ராஜசேகர் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் இருந்த சிந்துவும், அவரது மகள் தீப்தியும் திடீரென்று மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் தாய், மகள் மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அவர்கள் உடனடியாக அத்திபெலே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து தாய், மகளின் உடல்களை கைப்பற்றி விசாரித்தனர்.

காரணம் என்ன?

அப்போது தென் ஆப்பிரிக்கா நாட்டில் வேலை செய்யும் ராஜசேகர் 6 மாதங்களுக்கு ஒரு முறை இந்தியாவுக்கு வருவதை வழக்கமாக வைத்திருந்தார். ஆனால் கணவர் வெளிநாட்டில் வேலை செய்வதால், அவருடன் சேர்ந்து வாழ முடியவில்லை என்று சிந்து மிகவும் மனம் உடைந்து வாழ்ந்து வந்ததாக தெரிகிறது.

இதன் காரணமாக சிந்து தனது மகள் தீப்தியுடன் சேர்ந்து தற்கொலை செய்தது தெரியவந்து உள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் அத்திபெலே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story