மதுராந்தகத்தில் மரக்கட்டையால் அடித்து தொழிலாளி கொலை நண்பர் கைது


மதுராந்தகத்தில் மரக்கட்டையால் அடித்து தொழிலாளி கொலை நண்பர் கைது
x
தினத்தந்தி 8 Aug 2017 5:00 AM IST (Updated: 8 Aug 2017 1:25 AM IST)
t-max-icont-min-icon

மதுராந்தகத்தில், தொழிலாளியை மரக்கட்டையால் அடித்து கொலை செய்ததாக அவருடைய நண்பரை போலீசார் கைது செய்தனர்.

மதுராந்தகம்,

காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த ஜமீன் எண்டத்தூரைச் சேர்ந்தவர் தனசேகர் (வயது 45). இவரும், மதுராந்தகம் வன்னியர் தெருவைச் சேர்ந்த குமார் (65) என்பவரும் நண்பர்கள். இருவரும் மதுராந்தகம் பஸ் நிலையம் மற்றும் கடைகளில் கூலி வேலை செய்து வந்தனர்.

நண்பர்கள் இருவரும் கடந்த 5–ந் தேதி மதுராந்தகம் பஸ் நிலையம் அருகே ஒன்றாக அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. போதை தலைக்கேறியதும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த குமார், அருகில் கிடந்த மரக்கட்டையால் தனசேகரின் தலையில் ஓங்கி அடித்தார்.

இதில் படுகாயம் அடைந்த தனசேகர் மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் இரவு தனசேகர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் மதுராந்தகம் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின், கொலையான தனசேகர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தார்.

மேலும் இது தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை மதுராந்தகம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுராந்தகம் கிளை சிறையில் அடைத்தனர்.


Next Story