விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடத்தை அடுத்த மைப்பாறை கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்.
சங்கரன்கோவில்,
சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடத்தை அடுத்த மைப்பாறை கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் கடந்த 2009–ம் ஆண்டு சைக்கிளில் சென்றபோது அரசு பஸ் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுதொடர்பாக அவருடைய மனைவி திருவேங்கடம்மாள் மற்றும் வாரிசுகள் கடந்த 2010–ம் ஆண்டு சங்கரன்கோவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு மதுரை கோட்ட அரசு போக்குவரத்து கழகம் ரூ.5 லட்சத்து 11 ஆயிரத்து 909 நஷ்டஈடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
ஆனால் நஷ்டஈடு வழங்காமல் காலம் தாழ்த்தி வந்ததால் கோர்ட்டு உத்தரவுப்படி, நேற்று காலை சங்கரன்கோவிலில் இருந்து மதுரை செல்ல இருந்த மதுரை கோட்ட அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story