கர்நாடக காங்கிரஸ் சார்பில் ஊர்வலம் பெங்களூருவில் நடந்தது
வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் 75–வது ஆண்டையொட்டி கர்நாடக காங்கிரஸ் சார்பில் ஊர்வலம் பெங்களூருவில் நடந்தது.
பெங்களூரு,
காங்கிரசில் இருப்பது நாம் செய்த பாக்கியம் ஆகும். வெள்ளையனே வெளியேறு போராட்டம் நடந்து 75 ஆண்டுகள் ஆகிறது. அதை கொண்டாடும் விதமாக காங்கிரஸ் இந்த ஊர்வலத்தை நடத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த புனிதமான மாதத்தில், அன்று போராட்டம் நடத்தியதின் விளைவாக நாட்டில் ஜனநாயகம் மலர்ந்தது.
நாம் அரசியல் மூலமாக மக்கள் சேவை ஆற்றுகிறோம். குஜராத்தில் நடைபெற்ற டெல்லி மேல்–சபை தேர்தலில் உண்மைக்கு வெற்றி கிடைத்துள்ளது. பா.ஜனதாவின் முயற்சி தோற்கடிக்கப்பட்டுள்ளது. இதற்காக தேர்தல் ஆணையத்திற்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். இந்த வெற்றி அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் பா.ஜனதாவின் தோல்விக்கு முன்னோட்டமாக அமையும்.இவ்வாறு டி.கே.சிவக்குமார் பேசினார்.
மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் பேசுகையில், “அன்று யார் ஆங்கிலேயர்களுடன் கைகோர்த்து செயல்பட்டார்களோ அவர்களே இன்று நாட்டை ஆட்சி செய்கிறார்கள். நாட்டில் குறிப்பாக உத்தரபிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஆதிதிராவிடர்கள், முஸ்லிம் மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதனால் நாம் ஒழுக்கமாக கட்சி பணிகளை ஆற்ற வேண்டும். நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்றும் வகையில் நாம் நடைபோட வேண்டும். நமது கட்சி தலைவர் ராகுல் காந்தி மீது கல் வீசுகிறார்கள். நாம் அமைதியாக இருக்க வேண்டுமா?. இதற்கு தேர்தல் மூலம் நாம் பதில் சொல்ல வேண்டும்“ என்றார்.Related Tags :
Next Story