கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி,
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி. எஸ்.டி. பிரிவு சார்பில், நேற்று காலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில எஸ்.சி. எஸ்.டி. பிரிவு தலைவர் செல்வ பெருந்தகை தலைமை தாங்கினார். மாவட்ட காங்கிரஸ் தலைவர் சீனிவாசன், மாவட்ட எஸ்.சி. எஸ்.டி. பிரிவு தலைவர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோரிக்கைகள்சிறுபான்மையின மக்களுக்கு எதிரான பா.ஜ.க. அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்தும், கோவில்பட்டியில் 2–வது குடிநீர் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். கோவில்பட்டியில் உள்ள மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் போதிய டாக்டர்களை நியமிக்க வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். கடந்த 2 ஆண்டுகளுக்கான பயிர் காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும். தேசிய ஊரக தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும், இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
கலந்து கொண்டவர்கள்முன்னாள் எம்.பி. ராமசுப்பு, முன்னாள் எம்.எல்.ஏ. பழனிசாமி, நகர காங்கிரஸ் தலைவர் சண்முகராஜன், பிரேம்குமார், மாநில பேச்சாளர் வேல்சாமி, சொத்துமதிப்பு குழு ராஜலிங்கராஜா, விருதுநகர் மாவட்ட எஸ்.சி. பிரிவு தலைவர் காளிராஜ், வர்த்தக பிரிவு ராஜா, வக்கீல் மகேஷ், முத்துசுயம்பு, தங்க மாரியப்பன், ஜோஸ், சுப்புராயலு, கருப்பையா, துரைராஜ், கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். சண்முகராஜ் நன்றி கூறினார்.