ஆரணியில், பிளாஸ்டிக் முட்டைகள் விற்பனையா?


ஆரணியில், பிளாஸ்டிக் முட்டைகள் விற்பனையா?
x
தினத்தந்தி 11 Aug 2017 11:14 PM GMT (Updated: 11 Aug 2017 11:14 PM GMT)

ஜானகிராமன் என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆரணி புதிய பஸ்நிலையம் அருகேயுள்ள முட்டை வியாபாரியிடம் 50 முட்டைகள் வாங்கி சென்றுள்ளார்.

ஆரணி,

ஆரணியை அடுத்த ராட்டினமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஜானகிராமன். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆரணி புதிய பஸ்நிலையம் அருகேயுள்ள முட்டை வியாபாரி ஒருவரிடம் 50 முட்டைகள் வாங்கி சென்றுள்ளார். அவற்றில் 20 முட்டைகள் சாப்பிடுவதற்கு உகந்ததாக இல்லை. அதனால் அவை பிளாஸ்டிக் முட்டையாக இருக்கலாம் என சந்தேகமடைந்த அவர் ஆரணி தாசில்தார் சுப்பிரமணியிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து வருவாய் ஆய்வாளர்கள் தட்சணாமூர்த்தி, திருவேங்கடம், கிராம நிர்வாக அலுவலர்கள் யுவராஜ், இளவரசன் ஆகியோர் ஜானகிராமன் முட்டை வாங்கிய கடையில் சோதனை செய்து விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் செந்தில்குமார், வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆர்.எஸ்.பாபு, ரவி மற்றும் அலுவலர்கள் ஆரணியில் உள்ள அனைத்து முட்டை கடைகள், மளிகை கடைகளில் பிளாஸ்டிக் முட்டைகள் விற்பனை செய்யப்படுகிறதா? என சோதனை செய்தனர்.


Next Story