18–ந்தேதி முதல் மும்பையில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு
18–ந் தேதி முதல் மும்பையில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மும்பை,
கடந்த ஜூன் மாதம் முதல் நேற்று முன்தினம் வரை மும்பையில் 1130 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இது வழக்கமாக பெய்ய வேண்டிய மழை அளவை (1471 மி.மீ.) விட 23 சதவீதம் குறைவு ஆகும்.
இந்தநிலையில் வரும் 18–ந்தேதி முதல் மும்பையில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:–கடந்த 15 நாட்களாக மும்பை மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்வதற்கான சூழல் இல்லாமல் இருந்தது. இந்தநிலையில் இமய மலையின் தென் பகுதியில் உருவான சூறாவளியால் அரபிக்கடலில் குளிர்ந்தநிலை உருவாகி, வரும் 18–ந்தேதியில் இருந்து மும்பை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story