மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 11 மாட்டு வண்டிகள் பறிமுதல்
வெம்பாக்கம் அருகே புதுப்பாளையம் பாலாற்றில் இருந்து மணல் கடத்தப்படுவதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
வெம்பாக்கம்,
வெம்பாக்கம் அருகே புதுப்பாளையம் பாலாற்றில் இருந்து மணல் கடத்தப்படுவதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து வெம்பாக்கம் தாசில்தார் பெருமாள், மண்டல துணை தாசில்தார் துளசிராமன், வருவாய் ஆய்வாளர் கீர்த்திராஜ், கிராம நிர்வாக அலுவலர்கள் அப்பாதுரை, பாலகிருஷ்ணன், சங்கர் மற்றும் அலுவலர்கள் அந்த பகுதிக்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்த அதே பகுதியை சேர்ந்த நாராயணன், பன்னீர்செல்வம், பார்த்திபன், ராஜா, தயாளன், பரிமளம், மாரி, மேகநாதன், பரந்தாமன், முருகேசன், அன்பின் நாதன் ஆகியோரை அவர்கள் மடக்கி பிடித்தனர். பின்னர் 11 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்து தூசி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Related Tags :
Next Story