லஞ்சம், ஊழலுக்கு எதிராக குரல்கொடுத்து தேசத்தின் கட்டமைப்புக்கு உதவுங்கள்


லஞ்சம், ஊழலுக்கு எதிராக குரல்கொடுத்து தேசத்தின் கட்டமைப்புக்கு உதவுங்கள்
x
தினத்தந்தி 15 Aug 2017 5:30 AM IST (Updated: 15 Aug 2017 1:48 AM IST)
t-max-icont-min-icon

லஞ்சம், ஊழலுக்கு எதிராக குரல்கொடுத்து தேசத்தின் கட்டமைப்புக்கு உதவுங்கள் கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள்

புதுச்சேரி,

புதுவை கவர்னர் மாளிகையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு முதன் முறையாக தேசிய ஒற்றுமைக்கான சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. இதில் பல்வேறு மத தலைவர்கள், சமூக சிந்தனையாளர்கள், ஆர்வலர்கள் என 300–க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு கவர்னர் கிரண்பெடி தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:–

புதுச்சேரி ஆன்மீகம், இயற்கை வளத்தை பெற்றுள்ளது. இங்கு 250 வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. இவற்றில் பாகூர் மூலநாத சுவாமி கோவில் 9–ம் நூற்றாண்டை சேர்ந்ததாகும். சமூகத்தில் செல்வாக்கு பெற்றவர்கள் கோயில் அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். வழிபாட்டுத்தலங்களை சிறப்புற பராமரிப்பது அவர்களின் கடமையாகும். அனைத்து மதத்தலைவர்கள், சமூக சிந்தனையாளர்கள் லஞ்சம், ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்து தேசத்தின் கட்டமைப்புக்கு உதவ வேண்டும். புதுச்சேரியில் வளங்கள் பல இருந்தும் அதனை பயன்படுத்தி முன்னேறாமல், மக்கள் குடியின் பிடியில் சிக்கி இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story