திருச்செங்கோட்டுக்கு வருகை தரும் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்


திருச்செங்கோட்டுக்கு வருகை தரும் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 25 Aug 2017 10:15 PM GMT (Updated: 2017-08-26T02:12:55+05:30)

திருச்செங்கோட்டுக்கு, 31–ந் தேதி வருகை தரும் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.

நாமக்கல்,

நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர் உடையவர் தலைமை தாங்கினார். நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் பார்.இளங்கோவன், நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.மூர்த்தி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் வருகிற 31–ந் தேதி நாமக்கல் மேற்கு மாவட்டம் திருச்செங்கோடு நகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு வருகை தரும் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை வரவேற்பது, திருச்செங்கோட்டில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் திரளானோர் கலந்து கொள்வது, அடுத்த மாதம் செப்டம்பர் 16–ந் தேதி திண்டுக்கல்லில் நடைபெறும் முப்பெரும் விழாவிற்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க.வினர் அதிகளவில் பங்கேற்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.பி.ராமசுவாமி, பொன்னுசாமி, மாநில சட்டத்திட்ட திருத்தக்குழு உறுப்பினர் நக்கீரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராஜேஷ்குமார், நகர செயலாளர் சி.மணிமாறன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story