சட்டவிரோத சீரமைப்பு பணி நடிகை ராணி முகர்ஜிக்கு மாநகராட்சி நோட்டீஸ்


சட்டவிரோத சீரமைப்பு பணி நடிகை ராணி முகர்ஜிக்கு மாநகராட்சி நோட்டீஸ்
x
தினத்தந்தி 26 Aug 2017 9:55 PM GMT (Updated: 2017-08-27T03:25:45+05:30)

பிரபல இந்தி நடிகை ராணி முகர்ஜி மும்பை ஜூகு பகுதியில் பங்களா வீட்டில் வசித்து வருகிறார். இவர் கடந்த 2014–ம் ஆண்டு வீட்டை சீரமைக்க மும்பை மாநகராட்சியிடம் அனுமதி வாங்கி இருந்தார்.

மும்பை,

பிரபல இந்தி நடிகை ராணி முகர்ஜி மும்பை ஜூகு பகுதியில் பங்களா வீட்டில் வசித்து வருகிறார். இவர் கடந்த 2014–ம் ஆண்டு வீட்டை சீரமைக்க மும்பை மாநகராட்சியிடம் அனுமதி வாங்கி இருந்தார். இதற்கான கால அவகாசம் 2015–ம் ஆண்டே முடிந்துவிட்டது. இந்தநிலையில் தொடர்ந்து அவரது வீட்டில் சீரமைப்பு பணிகள் நடந்து வருவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து சில நாட்களுக்கு முன் மாநகராட்சி அதிகாரிகள் நடிகை வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு சட்டவிரோதமாக சீரமைப்பு பணிகள் நடந்து வருவது உறுதியானது. இதையடுத்து இதுகுறித்து விளக்கம் கேட்டு மாநகராட்சி சார்பில் ராணி முகர்ஜிக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.


Next Story