பெண்ணை கத்தியால் தாக்கிய போலீஸ்காரருக்கு 4 ஆண்டு ஜெயில் கோர்ட்டு தீர்ப்பு
பெண்ணை கத்தியால் தாக்கிய போலீஸ்காரருக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து மும்பை கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
மும்பை,
பெண்ணை கத்தியால் தாக்கிய போலீஸ்காரருக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து மும்பை கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
கத்தியால் தாக்கினார்மும்பை ஒர்லி காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் நித்தின். போலீஸ்காரர். இவர் முதல்–மந்திரி வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். இவரது மனைவி நீட்டா(வயது 35). இவர்களது வீட்டருகே வசித்து வருபவர் அங்குஷ்(59). இவரும் போலீஸ்காரராக உள்ளார். இதில் நீட்டாவிற்கும், போலீஸ்காரர் அங்குசின் மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 2014–ம் ஆண்டு ஏப்ரல் 22–ந்தேதி அன்றும் வழக்கம் போல 2 பேருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அங்குசின் மனைவி அவரிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அங்குஷ், நீட்டாவை கத்தியால் தாக்கினார். இதில் அவரின் தலை, கை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
4 ஆண்டு ஜெயில்இது குறித்து நீட்டா அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்குசை அதிரடியாக கைது செய்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை மும்பை கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணையில், அங்குஷ் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் நிரூபணமானது.
எனவே வழக்கை விசாரித்த நீதிபதி போலீஸ்காரர் அங்குஷிற்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறினார்.