வீட்டில் ரூ.24½ லட்சம் நகை, பணம் கொள்ளை நேபாள நாட்டை சேர்ந்த 3 பேர் கைது


வீட்டில் ரூ.24½ லட்சம் நகை, பணம் கொள்ளை நேபாள நாட்டை சேர்ந்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 3 Sept 2017 4:15 AM IST (Updated: 3 Sept 2017 4:15 AM IST)
t-max-icont-min-icon

வீட்டில் ரூ.24½ லட்சம் நகை, பணம் கொள்ளையடித்த நேபாள நாட்டை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் உத்தரபிரதேசத்தில் சிக்கினர்.

மும்பை,

வீட்டில் ரூ.24½ லட்சம் நகை, பணம் கொள்ளையடித்த நேபாள நாட்டை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் உத்தரபிரதேசத்தில் சிக்கினர்.

வீட்டில் கொள்ளை

மும்பை கோரேகாவ் பகுதியை சேர்ந்தவர் மங்கேஷ். இவர் கடந்த சில தினங்களுக்கு முன் விநாயகர் மண்டல்களில் தரிசனம் செய்வதற்காக குடும்பத்துடன் சென்றிருந்தார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்த போது, பீரோவில் இருந்த ரூ.24 லட்சத்து 68 ஆயிரம் மதிப்புள்ள நகை, பணம் காணாமல் போயிருந்தன.

யாரோ மர்மஆசாமிகள் ஜன்னல் கண்ணாடியை உடைத்து வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடித்து சென்றிருந்தது தெரியவந்தது. இதனால் பதறி போன மங்கேஷ், வன்ராய் போலீசில் புகார் கொடுத்தார்.

3 பேர் கைது

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் நான்கு பேர் கொண்ட கும்பல் இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி இருந்தது தெரியவந்தது. இந்த நிலையில், அந்த கும்பலை சேர்ந்தவர்கள் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவிற்கு தப்பி சென்றிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து போலீசார் அங்கு சென்று உள்ளூர் போலீசார் உதவியுடன் கொள்ளையில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் நேபாள நாட்டை சேர்ந்த சஞ்சய் விஸ்வகர்மா (33), சக்தி (32), நவின் (30) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.18 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் விசாரணைக்காக மும்பை அழைத்து வரப்படுகின்றனர். தலைமறைவான அவர்களது கூட்டாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story