ஆனந்த சதுர்த்தியின் போது ஒலிபெருக்கிகள் பயன்படுத்த அனுமதி


ஆனந்த சதுர்த்தியின் போது ஒலிபெருக்கிகள் பயன்படுத்த அனுமதி
x
தினத்தந்தி 5 Sept 2017 5:04 AM IST (Updated: 5 Sept 2017 5:04 AM IST)
t-max-icont-min-icon

மும்பை ஐகோர்ட்டின் தடையை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்திவைத்ததால், ஆனந்த சதுர்த்தியின் உள்ளிட்ட பண்டிகை காலங்களின் போது ஒலிபெருக்கிகளை பயன்படுத்த அனுமதி கிடைத்துள்ளது.

மும்பை, 

நிதி தலைநகரமான மும்பையில் கொண்டாட்டங்களுக்கும் பஞ்சம் இல்லை. பண்டிகைகாலங்கள் இங்கு பெரிய ஒலிபெருக்கிகள், இசைவாத்தியங்கள் என கலைகட்டும். இந்த நிலையில் மும்பையில் 1,573 இடங்கள் அமைதி மண்டலமாக அறிவிக்கப்பட்டன.

இங்கு குறிப்பிட்ட அளவை விட சத்தமோ, இரைச்சலோ ஏற்படுத்த அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் பண்டிகைகாலங்களில் இங்கு ஒலிபெருக்கிகள் வைக்கமுடியாத நிலையில், கொண்டாட்டங்களுடன் ஊர்வலங்கள் நடத்த முடியாத நிலையும் ஏற்படுத்து. இதனால் பல விழாக்கள் கலை இழந்தன. இதையடுத்து மராட்டிய அரசு பண்டிகை காலங்களில் மட்டும் இந்த அமைதி மண்டலங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் தன்னார்வ தொண்டு அமைப்புகள் பொது நலன் வழங்கு தாக்கல் செய்யப்பட்டன. இதை விசாரித்த ஐகோர்ட்டு அரசின் உத்தரவிற்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து அரசு சுப்ரீம் கோர்டில் மேல்முறையீடு செய்தது.

அப்போது அரசு தரப்பு வக்கீல், ‘‘ இந்திய முழுவதும் இந்த விதிகள் உண்மையாக கடைப்பிடிக்கப்பட்டால் சிறிய மருத்துவமனைகள், பள்ளிகள் அதுமட்டும் அல்லாமல் கோர்ட்டு வளாகத்திற்கு அருகிலும் நாம் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த முடியாது. இதனால் நாடே அமையாகிவிடும். கொண்டாட்டங்கள் கலையிழந்துவிடும். ’’ என்று தன் வாதத்தை எடுத்து வைத்தார்.

இதை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, மும்பை ஐகோர்ட்டு விதித்திருந்த தடை உத்தரவை நீக்கியுள்ளது.

நாளை ஆனந்த சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில் ஐகோர்ட்டின் இந்த உத்தரவு மும்பை மக்களிடேயே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே நாளை அனைத்து பகுதிகளிலும் ஒலிபெருக்கிகள் பயன்படத்தப்படும் என தெரிகிறது.



Next Story