தேனி அருகே ‘டாஸ்மாக் கடை அமைத்தால் சாலை மறியல் செய்வோம்’ கலெக்டரிடம் கிராம மக்கள் மனு


தேனி அருகே ‘டாஸ்மாக் கடை அமைத்தால் சாலை மறியல் செய்வோம்’ கலெக்டரிடம் கிராம மக்கள் மனு
x
தினத்தந்தி 7 Sept 2017 4:45 AM IST (Updated: 7 Sept 2017 12:58 AM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே கெப்புரங்கன்பட்டியில் டாஸ்மாக் கடை அமைத்தால் சாலை மறியல் செய்வோம் என்று கலெக்டரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.

தேனி,

தேனி அருகே உள்ள மஞ்சிநாயக்கன்பட்டி ஊராட்சி கெப்புரங்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். கலெக்டர் வெங்கடாசலத்திடம் அவர்கள் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:–

பூதிப்புரத்தில் உள்ள டாஸ்மாக் கடையை எங்கள் ஊருக்கு மாற்றம் செய்வதாக தெரியவருகிறது. எங்கள் கிராமத்தில் மதுக்கடை அமைத்தால், பள்ளிக்கூடத்துக்கு சென்று வரும் மாணவ, மாணவிகள் பல இன்னல்களை சந்திக்க நேரிடும். பல குடும்பங்கள் பாதிக்கப்படும். குடும்ப பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.

எங்கள் ஊருக்கு டாஸ்மாக் கடை தேவையில்லை. டாஸ்மாக் கடை அமைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும். கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்காமல், டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டால் ஊரில் வசிக்கும் அனைவரும் சாலை மறியலிலும், பல்வேறு போராட்டத்திலும் ஈடுபடுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story