மேலூர் அரசு கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
மேலூரில் உள்ள அரசு கல்லூரியில், மாணவி அனிதா தற்கொலைக்கு அனுதாபம் தெரிவித்தும், நீட் தேர்வை எதிர்த்தும் மாணவ, மாணவிகள் கடந்த 2 நாட்களாக வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வந்தனர்.
மேலூர்,
மதுரையை அடுத்த மேலூரில் உள்ள அரசு கல்லூரியில், மாணவி அனிதா தற்கொலைக்கு அனுதாபம் தெரிவித்தும், நீட் தேர்வை எதிர்த்தும் மாணவ, மாணவிகள் கடந்த 2 நாட்களாக வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வந்தனர். இந்தநிலையில் நேற்று அவர்கள் கல்லூரி வளாகத்திற்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அதைத்தொடர்ந்து கல்லூரி பேராசிரியர்கள் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story