கச்சனாவிளை ரெயில் நிலையத்தின் கதவை உடைத்து மடிக்கணினி திருட்டு

கச்சனாவிளை ரெயில் நிலையத்தின் கதவை உடைத்து மடிக்கணினி திருட்டு
x
தினத்தந்தி 10 Sept 2017 2:30 AM IST (Updated: 9 Sept 2017 5:39 PM IST)
t-max-icont-min-icon

குரும்பூர் அருகே உள்ள கச்சனாவிளை ரெயில் நிலையத்தில் மேலாளராக பணியாற்றுபவர் காந்திமதிநாதன். இவர் நேற்று முன்தினம் இரவில் வேலை முடிந்து வழக்கம்போல் ரெயில் நிலையத்தை பூட்டி விட்டு சென்றார்.

தென்திருப்பேரை,

குரும்பூர் அருகே உள்ள கச்சனாவிளை ரெயில் நிலையத்தில் மேலாளராக பணியாற்றுபவர் காந்திமதிநாதன். இவர் நேற்று முன்தினம் இரவில் வேலை முடிந்து வழக்கம்போல் ரெயில் நிலையத்தை பூட்டி விட்டு சென்றார்.

பின்னர் நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள் ரெயில் நிலையத்தின் கதவை உடைத்து திறந்து, அங்கிருந்த மடிக்கணினியை திருடிச் சென்று விட்டனர். நேற்று காலையில் ரெயில் நிலையத்துக்கு வந்த காந்திமதிநாதன், அங்கு கதவு உடைக்கப்பட்டு மடிக்கணினி திருடு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். போலீஸ் மோப்ப நாய் ரெயில் நிலையத்தில் மோப்பம் பிடித்து விட்டு தண்டவாளத்தில் சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. ரெயில் நிலையத்தில் தினமும் வசூலாகும் பணத்தை மாலையில் குரும்பூர் வங்கியில் செலுத்துவது வழக்கம்.

பின்னர் மாலையில் வசூலாகும் பணத்தை ரெயில் நிலைய மேலாளர் வீட்டுக்கு எடுத்து சென்று விட்டு, காலையில் வசூலாகும் பணத்துடன் சேர்த்து வங்கியில் செலுத்துவார். இதனால் ரெயில் நிலையத்தில் பணம் வைக்காததால் திருட்டு போகாமல் தப்பியது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் குறித்து நெல்லை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து, மடிக்கணினியை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

Next Story