மும்பை விமான நிலையத்தில் ரூ.35 லட்சம் தங்கம் கடத்தி வந்தவர் சிக்கினார்


மும்பை விமான நிலையத்தில் ரூ.35 லட்சம் தங்கம் கடத்தி வந்தவர் சிக்கினார்
x
தினத்தந்தி 10 Sept 2017 3:17 AM IST (Updated: 10 Sept 2017 3:17 AM IST)
t-max-icont-min-icon

மும்பை உள்நாட்டு விமான நிலையத்தில் நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரவுள்ளதாக சுங்கவரித்துறை அதிகாரிக்கு தகவல் கிடைத்தது.

மும்பை,

மும்பை உள்நாட்டு விமான நிலையத்தில் நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரவுள்ளதாக சுங்கவரித்துறை அதிகாரிக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் அந்த விமானத்தில் வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் அந்த விமானத்தில் வந்து இறங்கிய ஒரு பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை தனியறைக்கு அழைத்து சென்று சோதனை நடத்தினர். இதில் அவர் ஆசனவாயில் மறைத்து வைத்திருந்த 1 கிலோ 26 கிராம் எடை கொண்ட தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.35 லட்சம் ஆகும். இதையடுத்து அதிகாரிகள் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் விஜய் ரோச்லானி என்பது தெரிய வந்தது.


Next Story