ஊத்துக்கோட்டை அருகே பழுதடைந்த நிலையில் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி அகற்ற பொதுமக்கள் கோரிக்கை


ஊத்துக்கோட்டை அருகே பழுதடைந்த நிலையில் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 11 Sept 2017 4:45 AM IST (Updated: 11 Sept 2017 1:15 AM IST)
t-max-icont-min-icon

ஊத்துக்கோட்டை அருகே மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி பழுதடைந்த நிலையில் உள்ளது. அதை அகற்றி புதிதாக அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊத்துக்கோட்டை,

ஊத்துக்கோட்டை அருகே உள்ள பேரண்டூரில் 3 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி மூலம் குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

மிகவும் பழமை அடைந்ததால் தொட்டியை தாங்கி நிற்கும் தூண்களில் சிமெண்டு பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது.

மேலும் தொட்டியின் கீழ் பகுதியில் இருந்து சிமெண்டு பெயர்ந்து விழுகிறது. குடிநீர் தொட்டியில் சரிவர பிளீச்சிங் பவுடர் தெளிப்பது என்று அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பழுதடைந்த நிலையில் உள்ள மேல்நிலை நீர் தேக்கத்தொட்டியை அகற்றி விட்டு புதிதாக அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story