விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிக்கம்பங்கள் சேதம் போலீசார் விசாரணை
முத்துப்பேட்டை அருகே உள்ள அறமங்காடு, தில்லைவிளாகம் பத்தர் பஸ் நிறுத்தம் ஆகிய 2 இடங்களில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பங்களை மர்மநபர்கள் வெட்டி சேதப்படுத்தினர்.
முத்துப்பேட்டை,
முத்துப்பேட்டை அருகே உள்ள அறமங்காடு, தில்லைவிளாகம் பத்தர் பஸ் நிறுத்தம் ஆகிய 2 இடங்களில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பங்களை மர்மநபர்கள் வெட்டி சேதப்படுத்தினர். இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் செல்வரசூன் முத்துப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுப்ரியா மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இப்பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுத்திட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல கடந்த மாதம் தில்லைவிளாகம் துரைதோப்பு பகுதியில் பா.ஜனதா கட்சி, முத்தரையர் சங்க கொடிக்கம்பங்களை சிலர் சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story