ஓமலூர் அருகே டேனிஸ்பேட்டை ஏரி நிரம்பியது


ஓமலூர் அருகே டேனிஸ்பேட்டை ஏரி நிரம்பியது
x
தினத்தந்தி 11 Sept 2017 4:15 AM IST (Updated: 11 Sept 2017 2:39 AM IST)
t-max-icont-min-icon

ஓமலூர் அருகே டேனிஸ்பேட்டை ஏரி நிரம்பியது.

ஓமலூர்,

சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி வட்டாரங்களிலும் சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

இதனால் ஏற்காடு மலையில் இருந்து டேனிஸ்பேட்டை அடிவாரம் வழியாக வரும் மேற்கு சரபங்கா ஆறு மற்றும் சர்க்கரைசெட்டிபட்டி குதமச்சிகரடு பகுதியில் இருந்து வரும் கிழக்கு சரபங்கா ஆறு ஆகியவற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது.

மேற்கு சரபங்கா ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வந்ததால் நேற்று டேனிஸ்பேட்டை ஏரி நிரம்பியது. இதில் இருந்து வெளியேறும் உபரிநீர் கோட்டேரிக்கு செல்கிறது. இதனால் கோட்டேரியில் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

இதேபோல் கிழக்கு சரபங்கா ஆற்றில் தண்ணீர் வரத்து காரணமாக காமலாபுரம் ஏரியில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கோட்டேரி மற்றும் காமலாபுரம் ஏரி நிரம்பினால்தான் மற்ற ஏரிக்களுக்கு தண்ணீர் செல்லும்.

டேனிஸ்பேட்டை ஏரி நிரம்பியதால் சிறுவர்கள் தண்ணீரில் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தனர். 

Related Tags :
Next Story