‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரி தி.மு.க., தோழமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்


‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரி தி.மு.க., தோழமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Sep 2017 11:00 PM GMT (Updated: 2017-09-14T02:50:58+05:30)

தமிழகத்தில் ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்ககோரி புதுக்கோட்டையில் தி.மு.க., தோழமை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை,

அரியலூர் மாணவி அனிதாவிற்கு நீட் தேர்வால் மருத்துவ கனவு தகர்ந்து அவர் தற்கொலை செய்து கொண்டார். இதனால் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும். இறந்த அனிதாவிற்கு நீதி வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடைபெற்றது. இதனையடுத்து நேற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு தோழமை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

இதன் ஒருபகுதியாக புதுக்கோட்டையில் திலகர் திடல் பகுதியில் அனிதா மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.எல்.ஏ. ரகுபதி, புதுக்கோட்டை எம்.எல்.ஏ. பெரியண்ணன் அரசு ஆகியோர் தலைமை வகித்தனர். ஆலங்குடி எம்.எல்.ஏ. மெய்யநாதன், வடக்கு மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு தோழமை கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

Next Story