மணப்பாடு திருச்சிலுவை ஆலய மகிமை திருவிழா திரளானவர்கள் கலந்து கொண்டனர்


மணப்பாடு திருச்சிலுவை ஆலய மகிமை திருவிழா திரளானவர்கள் கலந்து கொண்டனர்
x
தினத்தந்தி 15 Sept 2017 2:30 AM IST (Updated: 15 Sept 2017 12:47 AM IST)
t-max-icont-min-icon

மணப்பாடு திருச்சிலுவை ஆலய மகிமை திருவிழா நடந்தது. விழாவில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

உடன்குடி,

மணப்பாடு திருச்சிலுவை ஆலய மகிமை திருவிழா நடந்தது. விழாவில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

திருச்சிலுவை ஆலயம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பழமைவாய்ந்த கிறிஸ்தவ ஆலயங்களில் மணப்பாடு திருச்சிலுவை ஆலயமும் ஒன்றாகும். இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் மகிமை திருவிழா 11 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு 438–வது மகிமை திருவிழா கடந்த 4–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் நடந்தது.

10–ம் திருநாளான நேற்று முன்தினம் மாலையில் மலையாள திருப்பலி நடந்தது. தொடர்ந்து தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் மாலை ஆராதனை நடந்தது.

திருவிழா திருப்பலி

விழாவின் நிறைவு நாளான நேற்று அதிகாலையில் திருப்பலிகள் நடந்தன. தொடர்ந்து காலையில் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் மகிமை திருவிழா திருப்பலி, மெய்யான திருச்சிலுவை ஆசீர் நடந்தது. விழாவில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

மாலையில் கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை பங்குதந்தை இருதயராஜ் பர்னாந்து, உதவி பங்குதந்தை ஜஸ்டின் குழந்தைராஜ், ஆன்மிக குரு தெயோபிலஸ் தலைமையில் பங்கு மக்கள் செய்து இருந்தனர்.


Next Story