பள்ளி வேன் கவிழ்ந்து மாணவ- மாணவிகள் 12 பேர் படுகாயம்


பள்ளி வேன் கவிழ்ந்து மாணவ- மாணவிகள் 12 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 14 Sep 2017 11:00 PM GMT (Updated: 2017-09-15T01:04:46+05:30)

திண்டுக்கல் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து மாணவ- மாணவிகள் 12 பேர் படுகாயம்

திண்டுக்கல்,

திண்டுக்கல்லை அடுத்த அய்யலூர் பேரூராட்சி அலுவலகம் அருகே தனியாருக்கு சொந்தமான மழலையர் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியை சேர்ந்த வேன் ஒன்று, நேற்று காலை கருவார்பட்டி, பூசாரிபட்டி, கிணத்துப்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாணவ- மாணவிகளை ஏற்றிக்கொண்டு அய்யலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. வேனை அய்யலூர் பகுதியை சேர்ந்த பாஸ்கரன் (வயது 45) என்பவர் ஓட்டினார். பாலத்தோட்டம் பிரிவு அருகே வேன் சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் மாணவ-மாணவிகள் நவீன் (9), ஹரிஸ் (9), நிவேதா (8) உள்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Tags :
Next Story