‘ஸ்குரூ டிரைவர்’ , ‘பேப்பர் கிளிப்பு’களில் மறைத்து கடத்தி வந்த ரூ.35 லட்சம் தங்கம் பறிமுதல்


‘ஸ்குரூ டிரைவர்’ , ‘பேப்பர் கிளிப்பு’களில் மறைத்து கடத்தி வந்த ரூ.35 லட்சம் தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 23 Sep 2017 11:15 PM GMT (Updated: 2017-09-24T02:40:40+05:30)

‘ஸ்குரூடிரைவர்‘கள் மற்றும் ‘பேப்பர் கிளிப்பு’களில் மறைத்து பயணிகள் கடத்தி வந்த ரூ.35 லட்சம் மதிப்பிலான தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

செம்பட்டு,

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலிண்டோ விமானம் நேற்று காலை திருச்சி விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த பஷீர் என்பவரது உடைமைகளை சோதனை செய்தபோது அவர் எடுத்து வந்த ‘ஸ்குரூ டிரைவர்’களில் 1 கிலோ தங்க கட்டிகளை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.29 லட்சம் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல் ஷார்ஜாவில் இருந்து நேற்று அதிகாலை திருச்சிக்கு ஏர் இந்தியா விமானத்தில் வந்த பயணிகளை, விமான நிலையத்தில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த ஜாபர் என்பவர் 200 கிராம் தங்க கட்டிகளை ‘பேப்பர் கிளிப்பு’களில் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. அந்த தங்கத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.6 லட்சம் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

Related Tags :
Next Story