உடற்பயிற்சி, இசை, ஓவியத்துறை சிறப்பாசிரியர்களுக்கான எழுத்துத் தேர்வு


உடற்பயிற்சி, இசை, ஓவியத்துறை சிறப்பாசிரியர்களுக்கான எழுத்துத் தேர்வு
x
தினத்தந்தி 23 Sep 2017 11:51 PM GMT (Updated: 2017-09-24T05:21:05+05:30)

உடற்பயிற்சி, இசை, ஓவியம், தையற்கலைத்துறை சிறப்பாசிரியர்களுக்கான எழுத்துத்தேர்வு வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி உள்பட வேலூர் நகரில் உள்ள 12 மையங்களில் நடந்தது.

வேலூர்,

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், உடற்பயிற்சி, இசை, ஓவியம், தையற்கலைத்துறை சிறப்பாசிரியர்களுக்கான எழுத்துத்தேர்வு வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி உள்பட வேலூர் நகரில் உள்ள 12 மையங்களில் நடந்தது.

தேர்வுக்காக விண்ணப்பித்திருந்த 3,328 பேரில் 3,193 பேர் தேர்வு எழுதினர். வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை கலெக்டர் ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


Next Story