செம்பூர் ரெயில்நிலைய நடைமேம்பாலத்தில் நடைபாதை வியாபாரிகள் ஆக்கிரமிப்பு


செம்பூர் ரெயில்நிலைய நடைமேம்பாலத்தில் நடைபாதை வியாபாரிகள் ஆக்கிரமிப்பு
x
தினத்தந்தி 7 Oct 2017 4:15 AM IST (Updated: 7 Oct 2017 1:05 AM IST)
t-max-icont-min-icon

செம்பூர் ரெயில்நிலைய நடைமேம்பாலத்தில் நடைபாதை வியாபாரிகளை அப்புறப்படுத்த தவறிய ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மும்பை,

மும்பை எல்பின்ஸ்டன் ரோடு ரெயில்நிலைய நடைமேம்பாலத்தில் சமீபத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் பலியானார்கள். 30–க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இந்த விபத்திற்கு நடைமேம்பாலத்தை ஆக்கிரமித்து இருந்த நடைபாதை வியாபாரிகளும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. இதையடுத்து ரெயில்நிலைய நடைமேம்பால வியாபாரிகளை அப்புறப்படுத்த பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 15 நாட்களுக்குள் ரெயில்நிலைய பகுதியில் நடைபாதை வியாபாரிகளை அகற்ற ராஜ்தாக்கரே ரெயில்வேக்கு கெடு விதித்துள்ளார்.

இந்தநிலையில் சமூகஆர்வலர் ஒருவர் செம்பூர் ரெயில்நிலைய நடைமேம்பாலத்தை நடைபாதை வியாபாரிகள் ஆக்கிரமித்து இருக்கும் காட்சியை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். மேலும் இந்த காட்சிகளை ரெயில்வே மந்திரியின் பார்வைக்கும் கொண்டு சென்றார். இதையடுத்து நடைபாதை வியாபாரிகளை ரெயில்வே நடைமேம்பாலத்தில் இருந்து அப்புறப்படுத்த தவறிய மான்கூர்டு ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ரஞ்சித் சிங் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை மூத்த ரெயில்வே பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் உறுதிபடுத்தி உள்ளார்.


Next Story