வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ–வைகோ மாலை அணிவித்து மரியாதை


வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ–வைகோ மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 16 Oct 2017 9:00 PM GMT (Updated: 16 Oct 2017 3:21 PM GMT)

கயத்தாறில், வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

கயத்தாறு,

கயத்தாறில், வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி கட்டபொம்மனின் திருவுருவ சிலைக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ, வைகோ ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை

சுதந்திர போராட்ட வீரர், வீரபாண்டிய கட்டபொம்மனின் 218–வது நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது.. இதையொட்டி கயத்தாறில் உள்ள மணிமண்டபத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் உருவ சிலைக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மணிமண்டப வளாகத்தில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் குலதெய்வ கோவிலான வீரசக்கதேவி ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஆலயத்தின் முன்பாக சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். கயத்தாறு அகிலாண்ட ஈசுவரி அம்மன் கோவில் மண்டபத்தில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

வைகோ

பின்னர் வீரபாண்டிய கட்டபொம்மனின் உருவ சிலைக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ம.தி.மு.க. மாநில மாணவர் அணி செயலாளர் தி.மு.ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழக மாநில அவை தலைவர் சங்கரவேலு, மாநில தலைவர் பி.ராஜூ, செயல் தலைவர் முருகவேல், காப்பாளர் வி.எஸ்.ராஜா, கொள்கை பரப்பு செயலாளர் ராமலிங்கம், பொதுச்செயலாளர் தங்கராஜ் உள்ளிட்டவர்களும் வீரபாண்டிய கட்டபொம்மனின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


Next Story