தாராபுரத்தை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.வின் மனைவி எங்கே? போலீசார் விசாரணை


தாராபுரத்தை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.வின் மனைவி எங்கே? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 21 Oct 2017 4:45 AM IST (Updated: 21 Oct 2017 3:04 AM IST)
t-max-icont-min-icon

தாராபுரம் முன்னாள் எம்.எல்.ஏ.வின் மனைவியை திடீரென்று காணவில்லை. அவர் எங்கு சென்றார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அண்ணாநகரை சேர்ந்தவர் கே.பொன்னுச்சாமி அ.தி.மு.க.முன்னாள் எம்.எல்.ஏ. இவரது மனைவி பி.சத்தியபாமா (வயது 45). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் 2 பேரும் வெளியூரில் படித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சத்தியபாமா கடந்த 4 நாட்களுக்கு முன்பு காலை 5.15 மணி அளவில் வீட்டில் இருந்த போது விவசாய கூலித்தொழிலாளர்கள் உழவர் சந்தைக்கு கொண்டு செல்லும் காய்கறிகளை கொண்டு காண்பித்துள்ளனர். அதன்பிறகு சத்தியபாமா வீட்டில் இருந்து புறப்பட்டு வெளியே சென்றுள்ளார். அதன்பிறகு அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அவர் எங்கு? சென்றார், என்ன ஆனார்? என்பது பற்றி தெரியவில்லை.

இதனைத்தொடர்ந்து சத்தியபாமாவை அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து தாராபுரம் போலீசில் அவரது கணவர் பொன்னுசாமி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்தியபாமா எங்கு சென்றார்?, என்ன ஆனார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி அவரை தேடி வருகிறார்கள். 

Next Story