நடைபாதை கேட்டு சாலையில் படுத்து உருளும் போராட்டம் நடத்திய 2 பேர் கைது


நடைபாதை கேட்டு சாலையில் படுத்து உருளும் போராட்டம் நடத்திய 2 பேர் கைது
x
தினத்தந்தி 21 Oct 2017 4:15 AM IST (Updated: 21 Oct 2017 3:04 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் நடைபாதை கேட்டு சாலையில் படுத்து உருளும் போராட்டம் நடத்திய 2 பேர் கைது

ஈரோடு,

ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் உள்ள சாலை ஓரங்களில் நடைபாதை அமைக்கக்கோரி மக்கள் மன்றம் சார்பில் சாலையில் படுத்து உருளும் போராட்டம் நேற்று நடந்தது. ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதி அருகே உள்ள நேதாஜி ரோட்டில், மக்கள் மன்ற அமைப்பாளர் செல்லப்பன் மற்றும் அகில இந்திய மக்கள் நலக்கழக மாவட்ட தலைவர் பழனிசாமி ஆகியோர், கோரிக்கையை வலியுறுத்தி ரோட்டில் படுத்து உருண்டனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஈரோடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று செல்லப்பன் மற்றும் பழனிசாமியை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Related Tags :
Next Story