ரே‌ஷன் சர்க்கரை விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


ரே‌ஷன் சர்க்கரை விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 Nov 2017 4:15 AM IST (Updated: 1 Nov 2017 2:01 AM IST)
t-max-icont-min-icon

ரே‌ஷன் சர்க்கரை விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில்,

மத்திய பா.ஜனதா அரசின் ஏழை, நடுத்தர குடும்பங்களை பாதிக்கும் வகையிலான மானியங்களை ரத்து செய்யும் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும், சாதாரண மக்கள் பயன்பெறும் பொதுவினியோக முறையினை சீர்குலைக்கும் விதமாக ரே‌ஷன் கடைகளில் சர்க்கரை ஒரு கிலோவுக்கு ரூ.13.50–ல் இருந்து ரூ.25 ஆக உயர்த்தியுள்ளதை ரத்து செய்ய வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நாகர்கோவில் நகரக்குழு சார்பில் நேற்று நாகர்கோவில் அண்ணா சிலை சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு நகரக்குழு செயலாளர் பெஞ்சமின் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் அந்தோணி தொடக்க உரையாற்றினார். பி.எஸ்.என்.எல். ஓய்வு பெற்றோர் நலச்சங்க நிர்வாகி மீனாட்சி சுந்தரம், போக்குவரத்து இடைக்குழு செயலாளர் லியோ, நகரக்குழு உறுப்பினர்கள் அஸிஸ், கலா, கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகரக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் நன்றி கூறினார். போராட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.


Next Story