பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 31 Oct 2017 10:30 PM GMT (Updated: 31 Oct 2017 9:19 PM GMT)

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பாடாலூர்,

உணவு, வேலைக்கான கோரிக்கைகளை வலியுறுத்தி ஆலத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாதர் சங்க ஒன்றிய செயலாளர் வசந்தா தலைமை தாங்கினார். ஒன்றிய பொருளாளர் புஷ்பா, நிர்வாகிகள் ஜெயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாதர் சங்கத்தின் முன்னாள் மாநில குழு உறுப்பினர் கலையரசி, மாதர் சங்க மாவட்ட செயலாளர் பத்மாவதி, விவசாய சங்க மாவட்ட செயலாளர் செல்லதுரை, மாவட்ட தீண்டாமை ஒழிப்பு சங்க மாவட்ட செயலாளர் கருணாநிதி, மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணசாமி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் உணவு பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பெண்களுக்கு நகர்ப்புற வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும். ஸ்மார்ட் கார்டில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய வேண் டும். 100 நாள் வேலைத் திட்டத்தில் பெண்களுக்கு வழங்கப்படாமல் உள்ள நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும். தெரணி கிராமத்தில் இருந்து பையோரி கடைக்கால் வழியாக பாட்டப்பன் கோவில் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும். புதுக்குறிச்சி சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும். தெரணி கிராமத்தில் பெண்களுக்கு பொது கழிப்பிட வசதி கட் டித்தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story