தென்காசியில் சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கைது
தென்காசியில் சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 62 பேர் கைது செய்யப்பட்டனர்.
தென்காசி,
தென்காசியில் சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 62 பேர் கைது செய்யப்பட்டனர்.
நடைபயணம்நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கடந்த 23–ந் தேதி தென்காசி அருகே உள்ள காசிதர்மத்தை சேர்ந்த இசக்கிமுத்து தனது குடும்பத்துடன் கந்துவட்டி கொடுமையால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். எனவே மாநில அரசு கந்துவட்டி சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும். கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஏழை விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு சிறு, குறு கடன் நிபந்தனையின்றி வழங்க வேண்டும். பொதுத்துறை வங்கிகளும் கூடுதலாக சிறு கடன் நிபந்தனையின்றி வழங்க வேண்டும். சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகள் கடன்களை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தென்காசியில் இருந்து நெல்லைக்கு நடைபயணம் செல்ல முயன்றனர்.
சாலை மறியல் போராட்டம்தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் இருந்து நடைபயணம் புறப்படுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு அங்கு ஏராளமானவர்கள் குவிந்து நின்று கோஷங்கள் எழுப்பினர். இந்த நடைபயணத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. எனவே, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன் (தென்காசி), சுரேஷ்குமார் (செங்கோட்டை), ஜானகி (குற்றாலம்) மற்றும் போலீசார் அவர்களை தடுத்தனர். உடனே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
62 பேர் கைதுஇந்த போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில தலைவர் வாலண்டினா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் பெருமாள், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் வேலுமயில், மாதர் சங்க மாவட்ட செயலாளர் கற்பகம், விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் பால்சாமி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் ராஜகுரு, தலைவர் மேனகா உள்பட 62 பேரை போலீசார் கைது செய்தனர்.