தமிழகத்தில் மக்களின் நிலையை பிரதிபலிக்க தவறிய அரசாக அ.தி.மு.க. ஆட்சி செயல்படுகிறது ஜி.கே.வாசன்


தமிழகத்தில் மக்களின் நிலையை பிரதிபலிக்க தவறிய அரசாக அ.தி.மு.க. ஆட்சி செயல்படுகிறது ஜி.கே.வாசன்
x
தினத்தந்தி 2 Nov 2017 4:45 AM IST (Updated: 2 Nov 2017 12:57 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் மக்களின் நிலையை பிரதிபலிக்க தவறிய அரசாக அ.தி.மு.க. ஆட்சி செயல்படுகிறது என்று ஜி.கே.வாசன் கூறினார்.

பண்ருட்டி,

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று பண்ருட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

அ.தி.மு.க. ஆட்சி மக்களின் நிலையை பிரதிபலிக்க தவறிய அரசாக செயல்படுகிறது. கட்சியிலும், ஆட்சியிலும் பல்வேறு கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளது. மக்கள் பிரச்சினை முழுமையாக கவனிக்க முடியாத சூழல் உள்ளது.

தமிழகத்தில் மழைநீரை சேமிக்க தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த 2 நாட்களாக பெய்த மழையினால் தெருக்களில் தண்ணீர் வெள்ளமாக தேங்கி வீடுகளுக்குள் புகுந்து வரும் நிலை உருவாகியுள்ளது. சாலைகள் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக மாறியுள்ளது. இந்த நிலையை தமிழக அரசு மாற்ற வேண்டும்.

விவசாயிகளின் கடன் வசூலை மாவட்ட நிர்வாகம் ஒத்திவைக்க வேண்டும். ஜி.எஸ்.டி. வரியால் நீண்ட கால நன்மை என மத்திய அரசு கூறிவருகிறது. ஆனால் எல்லா எதிர்கட்சிகளும் எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை என்று தெரிவித்துள்ளது.

மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் பல்வேறு பாதிப்புகள் தான் ஏற்பட்டுள்ளது. பல முக்கிய துறைகளில் வரி குறைப்பு செய்ய வேண்டி உள்ளது.

தமிழகத்தில் கந்து வட்டி தொழில் கொடி கட்டி பறக்கிறது. இப்பிரச்சினையை தீர்க்க கடுமையான சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்துள்ள குடும்பங்களுக்கு முறையான வேலை கொடுக்க வேண்டும்.

இவ்வாறு ஜி.கே. வாசன் கூறினார்.


Next Story