மருத்துவமனையில் நோயாளிகள் பிரிவு ரூ.13½ லட்சத்தில் மேம்படுத்தப்படுகிறது கலெக்டர் தகவல்


மருத்துவமனையில் நோயாளிகள் பிரிவு ரூ.13½ லட்சத்தில் மேம்படுத்தப்படுகிறது கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 2 Nov 2017 4:00 AM IST (Updated: 2 Nov 2017 2:45 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் பிரிவு ரூ.13½ லட்சத்தில் மேம்படுத்தப்படுகிறது என்று கலெக்டர் அண்ணாதுரை கூறினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மருத்துவகல்லூரி மருத்துவமனை நோயாளர் நலச்சங்க ஆளுமை குழுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கி பேசினார்.

இக்கூட்டத்தில் மருத்துவகல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் ஜெயக்குமார், சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ஜெயசேகர், துணை இயக்குனர் டாக்டர் சுப்பிரமணி, சுற்றுலா அலுவலர் ராஜசேகர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு கருத்துகளை தெரிவித்தனர்.

கூட்டத்தில் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனை நோயாளிகள் பிரிவு ரூ.13 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் உள்கட்டமைப்பு மேம்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு தேவையான சாலை வசதி, எல்.இ.டி. விளக்கு, 63 கே.வி. கொண்ட ஜெனரேட்டர், 1000 பெட் சீட், 500 தலையணை, 500 தலையணை உறை, ஜெனரேட்டருக்கு தேவையான 1000 லிட்டர் டீசல், லைசால் 1000 லிட்டர், பிளிச்சிங் பவுடர் 1 டன், கொசு மருந்து அடிக்கும் எந்திரம் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

Next Story