மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவம் டெல்லி உதவி போலீஸ் கமி‌ஷனருக்கு பிடிவாரண்டு


மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவம் டெல்லி உதவி போலீஸ் கமி‌ஷனருக்கு பிடிவாரண்டு
x
தினத்தந்தி 4 Nov 2017 1:28 AM IST (Updated: 4 Nov 2017 1:28 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் கடந்த 2008–ம் ஆண்டு நவம்பர் 26–ந் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர்–இ– தொய்பா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி அபு ஜிண்டாலை டெல்லி உதவி போலீஸ் கமி‌ஷனர் மணிஷி சந்திரா கைது செய்தார்.

மும்பை,

மும்பையில் கடந்த 2008–ம் ஆண்டு நவம்பர் 26–ந் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர்–இ– தொய்பா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி அபு ஜிண்டாலை டெல்லி உதவி போலீஸ் கமி‌ஷனர் மணிஷி சந்திரா கைது செய்தார். இந்த வழக்கின் விசாரணை மும்பை சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

விசாரணைக்கு ஆஜராகுமாறு மணிஷி சந்திராவுக்கு கோர்ட்டு சம்மன் அனுப்பியும் அவர் புறக்கணித்தார். ஆகையால், அவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி ஜி.ஏ.சனாப் நேற்று உத்தரவிட்டார்.


Next Story